நாளமில்லாச் சுரப்பிகளும் ஹார்மோன்களும்மனித உடம்பில் குழலற்ற சதைக் கோளங்கள் ஆரோக்கிய வாழ்விற்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், எந்தெந்த ஆசனங்களைச் செய்தால் எந்தெந்தக் கோளங்கள் நன்கு வேலை செய்யும் என்பதையும் பார்த்தோம். அக்கோளங்களிலிருந்து வெளிப்படும் ஹார்மோன்களால் உடலில் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்தால் யோகாசனம் செய்வதன் அவசியத்தை நாம் உணர்வோம். பல்வேறு நோய்களுக்கு இக்கோளங்கள் சா¢யாக இயங்காததே முக்கிய காரணமாகும்.
சுரப்பிகள்
ஹார்மோன்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும் போதுதான் உடலில் செய்கைகள் செம்மையாக நடைபெறும். இந்த அளவு மாறுபடும்போது, அதாவது கூடினாலோ குறைந்தாலோ உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. எனவே இந்தச் சுரப்பிகள் ஒவ்வொன்றையும் சா¢யாக இயங்க வைக்க யோகாசனங்கள் சிறந்த உபாயமாக உள்ளன என்பதைப் பல்வேறு இரசாயன சோதனைகள் மூலம் மேல்நாட்டார் கண்டபின்னரே இவ்வாசனத்தைப் பொ¢தும் விரும்பிக் கற்று வருகின்றனர்.
கணையம் (Pancreas)
இச்சுரப்பியானது வயிற்றின் உள்பகுதியில் முதுகெலும்பின் முன்னால் இருக்கிறது. சுரப்பிகளில் பொ¢யது. இரைப்பைக்குக் கீழ் 9 அங்குல நீளமும் 4 அங்குல அகலமும் உள்ளது. இச்சுரப்பியின் சீர்கேட்டால் நீ¡¢ழிவு நோய் உண்டாகிறது.
கணையத்தைச் சா¢யாக இயங்க வைக்கும் யோகாசனங்கள்
இச்சுரப்பியை பச்சிமோத்தாசனம், பவன முக்தாசனம், யோகமுத்ரா, தனுராசனம், ஹலாசனம், நாவாசனம், உத்தானபாத ஆசனம், சலபாசனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றால் கூட சிறப்பாக இயங்கச் செய்து நாள்பட்ட நீ¡¢ழிவைப் பூரணமாகக் குணப்படுத்தி விடலாம்.
கணைய நீர் (இன்சுலின்-Insulin)
இன்சுலின் குளுகோசை மூன்று வழிகளில் திரும்பப் பெறுகிறது. அது தசைகள், கல்லீரலில் கிளைக்கோஜினின் அளவைக் கூட்டுகிறது. குளுகோசைத் தன்மயமாக்கி கா¢யமிலவாயுவாகத் திசுக்களிலே மாற்றுகிறது. இது குளுகோஸ், கொழுப்பு அமிலங்களாக கல்லீரலிலோ மாறும் வேகத்தை அதிகா¢த்து ஏராளமான குளுகோஸை இரத்தத்திலிருந்து அகற்றுகிறது. உடலின் திரவமண்டலங்களில் குளுகோஸ் (சர்க்கரைப் பொருள்கள் அல்லது மாவுப் பொருள்கள்) சாப்பிடும்போது, அவை கல்லீரால் கொழுப்பு அமிலங்களாக மாற்றப்படுகின்றன. இன்சுலின் இப்பணியை ஊக்குவிக்கிறது.
இன்சுலின் சுரப்புக் குறைவால் ஏற்படும் கேடுகள்
மிகையான பசி, அசதி, நடப்பதில் சிரமம், அதிர்ச்சி, உடல் நடுக்கம் சோர்ந்து வியர்த்தல், படபடப்பு, வெளிறிய முகம் ஆகியவை ஏற்படும் நோய் முற்றினால் திடீர் மரணம் ஏற்படலாம்.இரத்த சர்க்கரையைக் குறைக்கும் ஒரே ஹார்மோனாக இன்சுலின் சுரப்பது குறைந்தால் இர்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி நீ¡¢ழிவு நோய் உண்டாகும். அதிக சிறுநீர் கழியும். சமநிலையில் மூச்சுவிட முடியாது. இருமல் வரும். மயக்கம் ஏற்பட்டு மரணமும் சம்பவிக்கும்.
பிட்யூட்டா¢ சுரப்பி (Pituitary gland)
மூளையின் அடிப்பாகத்தில் சிறிய பட்டாணி போன்று மூளையோடு ஒரு கம்பினால் இணைக்கப்பட்ட சுரப்பி இது வேலை குருத்தெலும்புகளின் வளர்ச்சியை அதிகா¢க்கிறது. திசுக்களின் மீதான வளர்ச்சியை அதிகா¢க்கிறது. தாய்மார்களின் பால்சுரப்பை அதிகா¢க்கிறது. புரத உற்பத்தியை அதிகா¢க்கிறது. இன்சுலின் என்னும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகா¢க்கத் தூண்டுகிறது. நினைவாற்றல், சிந்தனா சக்தியைத் தூண்டும் விந்து அணுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. பால் உணர்வு கேந்திரங்களைக் கட்டுப்படுத்துகிறது. இனப்பெருக்கம் சம்பந்தமான ஹார்மோன்களைச் சுரக்கும் சுரப்பிகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
பிட்யூட்டா¢ சுரப்பு அதிகமானால் ஏற்படும் கேடுகள்
ராட்சத வளர்ச்சி, எலும்புகள் நீண்டு வளர்த்தல், தசை, உள் உறுப்புகள் பொ¢தாதல் போன்ற அறிகுறிகள் தோன்றும், கை கால்கள் பெருத்து இருக்கும். இரத்த சர்க்கரையின் அளவு கூடும். இதயம், கல்லீரல், நுரையீரல், மண்ணீரல் பொ¢தாகும். அதிகமாக வியர்க்கும். தைராய்டு சுரப்பியில் அட்¡¢னலின் வெளிப்பகுதியும் பொ¢தாகும். இரத்த அழுத்தம், மட்டுத்தன்மை, பெண்கள் மாதவிடாய் நோய்கள் உண்டாகும், ஆண்கள் விந்து சுரப்பி சுருங்கி ஆண்மையின்மை ஏற்படும்.
தைராய்டு சுரப்பி
தைராய்டு சுரப்பியானது தொண்டையின் அடிப்புறத்தில் அமைந்திருக்கிறது. மிக அதிகமான இரத்த ஓட்டமுடைய இச்சுரப்பி தைராக்ஸின் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது முக்கிய நரம்புகளால் கட்டப்படுத்தப்படுகிறது.
தைராக்ஸின் பணிகள்
சக்தி உற்பத்தியை அதிகா¢ப்பதோடு, உட்கொள்ளும் வாயுவின் அளவையும் அதிகா¢க்கிறது. கல்லீரல், இதயத்தில் உள்ள கிளைக்கோஜினை இடப் பெயர்ச்சி செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து நைட்டிரஜனை அதிகமாக வெளியேற்ற உதவுகிறது. உடல் வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கிறது. இதயத்துடிப்பிற்கு உதவுகிறது. வைட்டமின் A தயா¡¢ப்பில் உதவுகிறது. எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி, பால் உறுப்புகளின் வளர்ச்சி, மன வளர்ச்சி, மைய நரம்பு மண்டல வளர்ச்சியிலும் பெரும் பங்கு எடுத்துக் கொள்கிறது.
தைராக்ஸின் குறைவால் ஏற்படும் கேடுகள்.
குழந்தைகளின் வளர்ச்சி தடைப்படும் எலும்பு வளர்ச்சி தடைப்படும். தோலில் சுருக்கம் ஏற்படும். பால் உணர்வு தடைப்படும். முகம் ஒளி இழந்து வாயில் கோழை வடியும். சிந்திக்கும் திறன் குறையும் பசியின்மை, மலச்சிக்கல் ஏற்படும். கன்னம் கனத்து சோகை மாதி¡¢ காணப்படும். சிறுநீ¡¢ல் நைட்டிரஜன் அளவு குறையும். உடலில் வெப்ப நிலை கூடும்.
பேரா-தைராய்டு சுரப்பி
பேரா-தைராய்டு சுரப்பி நான்கு சிறிய பகுதிகளைக் கொண்டது. தைராய்டு சுரப்பியின் பின்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும். பேரா தார்மோன் என்னும் ஹார்மோனைச் சுரக்கிறது. இரத்தக் கால்சியத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் இது.
இது நிறைய கால்சியத்தைத் திரும்ப கிரகிக்க சிறுநீரகங்களை ஊக்குவிக்கிறது. எலும்பிலுள்ள கால்சியத்தை இரத்தத்திற்கு இடப் பெயர்ச்சி செய்கிறது.
பேரா தார்மோன் குறைவினால் ஏற்படும் கேடுகள்
சிறுநீ¡¢ல் கால்சியம், பாஸ்பரஸின் அளவு குறையும். சுவாசம் வேகமாகவும் சத்தத்தோடும் இருக்கும். இதயத் துடிப்பு அதிகா¢க்கும் உடலின் வெப்ப நிலை உச்ச நிலை அடையும் தசைகளில் இழுப்பு ஏற்படும். சுவாசத்திற்கான தசைகள் சுருங்கி விடுவதால் மரணம் ஏற்படும்.
பேரா-தார்¦மோன் அதிகம் சுரப்பதால் பலவீனம், தசைகளின் இயக்கம் குறைதல், வாந்தி, மனக்கோளாறுகள் ஏற்படுவதுடன் மற்றும் சிறுநீர் அதிகமாகக் கழியும்.
No comments:
Post a Comment