Pages

Friday 16 September 2011

ஞான மூலிகைகள்

கரிசலாங்கண்ணி:
கரிசாலை எனற பெயர் கொண்ட இது ஒரு தெய்வீக மூலிகை என்று வள்ளல் பெருமான் கூறுகிறார்.ஏனெனில் இதை தினந்தோறும்பயன்டுத்துவதால் பித்தம் மற்றும் கபத்தை வெளியேற்றி உடம்பை நீடிக்க செய்யும். உள்ளொளியை பெருக்கும் வல்லமை பெற்றது.தினந்தோறும் பச்சையாகவோ அல்லது பொடியினை சூடான நீரில் கலந்து அருந்துவது நல்ல பலனை தரும்.

வல்லாரை:
வள்ளலார் கூறிய ஞான மூலிகையில் அடுத்தது வல்லாரை . இதற்கு சரஸ்வதி என்ற பெயரும் உண்டு. இது இரத்தத்தை தூய்மைபடுத்தி அறிவை பெருக்கும் வல்லமை வல்லாரைக்கு உண்டு. இதனை காயவைத்து பொடியாகவோ அல்லது மத்திரையாகவோ செய்து சாப்பிடலாம்.

தூதுவளை :
இது அறிவை பெருக்கி , கவன சக்தியை அதிகரிக்கும் வல்லமை பெற்றது. உடலிலுள்ள அசுத்தங்களை நீக்கி உடலை நெடுநாளைக்கு நீடிக்க செய்யும். மேலும் பல நோய்களை நீக்கும் வல்லமை பெற்றது.

No comments:

Post a Comment